/* */

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்

முதல் நாள் விழாவில் அருணாசலேஸ்வரர் மீது பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்
X

அருணாசலேஸ்வரர் மீது பொம்மை பூ போடும் நிகழ்ச்சி.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறும்.

முதல் நாள் விழாவான நேற்று இரவு கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள மகிழ மரம் அருகில் பன்னீர் மண்டபத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது சாமி மீது மங்கள வாத்தியங்கள் முழங்க பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை மாலை இரு நிலைகளிலும் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்து நாளும் இரவு பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவருக்கு பொம்மை மலர்களை தூவும் நிகழ்வு நடைபெறும்.

Updated On: 6 May 2022 1:25 AM GMT

Related News