/* */

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகுழுவுக்கு மத்திய அரசின் விருது

Awards Today -மத்திய அரசின் சிறந்த நிர்வாகத்திற்கான விருது திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழுவிற்கு வழங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகுழுவுக்கு மத்திய அரசின் விருது
X

விருது வெற்ற திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி
குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளார்.

Awards Today - திருவண்ணாமலை வேங்கிக்காலில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி வரவேற்றார்.

கூட்டத்தில் இந்திய அரசின் 75-வது சுதந்திர தினவிழாவை போற்றும் வகையில் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் சார்பில் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சியின் சிறந்த நிர்வாகம், வளர்ச்சி, சமூக சேவையை பாராட்டி தேசிய அளவில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கு தீன்தயாள் உபாத்யாய் பஞ்சாயத்து சசக்திகரன் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

இந்த விருது பெற ஒத்துழைத்த அனைத்து மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தும், விருது பெற்றதற்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியதோடு திருவண்ணாமலை மாவட்டம் பல்வேறு விருதுகளை பெற வேண்டுமென வாழ்த்தியமைக்கு நன்றி தெரிவித்தும், தமிழக அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க மற்றும் நலத்திட்டங்கள் வழங்க திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கலந்து கொண்டு தேசிய அளவில் விருது பெற ஒத்துழைப்பு அளித்த திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்களை கவுரவிக்கும் வகையில் விருது மற்றும் பாராட்டு சான்று வழங்கினார்.

இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் இல.சரவணன், ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Jun 2022 10:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  3. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  4. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  5. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  7. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  8. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  9. சினிமா
    Indian 2 புதிய ரிலீஸ் தேதி இதுவா?
  10. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...