/* */

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது. 10ம் வகுப்பு பதிவு செய்தவருக்கு காலாண்டுக்கு ரூ.600, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.900, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.1200, பட்டம், முதுகலை பட்டம் பதிவு செய்தோருக்கு ரூ.1800 வீதம் 3 ஆண்டுக்கு வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் குறைந்தது ஒரு ஆண்டு நிறைவு செய்தால் போதும். 10ம் வகுப்பிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1800, பிளஸ்2 பதிவு செய்தவருக்கு ரூ.2250, பட்டதாரிகளுக்கு ரூ.3000 வீதம் 10 ஆண்டுக்கு வழங்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 45 வயதுக்கு மிகாமல், மற்ற பிரிவினர் 40 வயது மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000-க்கு மிகையாமல் இருக்க வேண்டும்.

பதிவுதாரர்கள் http:// tnvelaivaaippu.gov.in இணையத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வேலை வாய்ப்பு அலுவலரிடம் வழங்கி பயன் பெறலாம். அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் உரிய சான்று நகல்கள், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்கள், உள்ளிட்ட ஆவணங்களுடன் அடுத்த மாதம் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Jan 2022 1:11 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை