/* */

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை: கோயில் நிர்வாகம் தகவல்

அன்னாபிஷேக விழாவையொட்டி நாளை 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை: கோயில் நிர்வாகம் தகவல்
X

அண்ணாமலையார் கோவில்,  பைல் படம்

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான, புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக உள்ளது. நினைத்தாலே முக்தியை தரக் கூடிய முக்தித் தலம் என்பதாலும், சிவனே மலையாக அமர்ந்திருப்பதாக கருதப்படுவதால் மலையை வலம் வந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி, அனைத்து விதமான செல்வ வளங்களும் கிடைக்கும் என்பதாலும் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

மாதந்தோறும் வரும் பெளர்ணமியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் வரும் நிலையில், அக்டோபர் மாதம் வரும் ஐப்பசி பெளர்ணமி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். ஐப்பசி பெளர்ணமி அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். திருவண்ணாமலையிலும் ஐப்பசி பெளர்ணமியான அக்டோபர் 28ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.

வெண்ணெய் கலந்த அன்னத்தால் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் நடத்தப்படவுள்ளது.

அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் சமயத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதாவது பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான மூன்று மணி நேரம் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அன்று நாள் முழுவதும் பெளர்ணமி திதி இருப்பதால் கிரிவலம் செல்ல முடியுமே தவிர, மாலை 6 மணிக்கு பிறகே அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் வழக்கம் போல் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதே போல் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வார விடுமுறை நாள் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் என்பதால் திருவண்ணாமலை நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 3ம் பிரகாரத்தில் தரிசன வரிசையை அனுமதிப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறைய வாய்ப்புள்ளதாகக் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 27 Oct 2023 1:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?