/* */

10, 12 ஆம் வகுப்பு கல்வி தகுதியை பள்ளிகளில் பதிவு செய்ய ஏற்பாடு

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதியும் பணியும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

10, 12 ஆம் வகுப்பு கல்வி தகுதியை பள்ளிகளில் பதிவு செய்ய ஏற்பாடு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12 வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணியும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவ மாணவிகள் கல்வித்தகுதியை பதிவு செய்ய ஆதார் அடையாள அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும்.

அக்டோபர் 1ஆம் தேதி வரை வேலை வாய்ப்பு பதிவு பணிகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். இதுதவிர இணையதளம் வழியாகவும் மாணவ-மாணவிகள் கல்வி தகுதியை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Sep 2021 5:07 AM GMT

Related News