/* */

ஆம்புலன்ஸ் ஊழியா்களின் நேர்மைக்கு பாராட்டு

திருவண்ணாமலை அருகே விபத்தில் சிக்கிய டாஸ்மாக் ஊழியரின் ரூ.90 90 ஆயிரத்தை மீட்டு, ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை மருத்துவா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

HIGHLIGHTS

ஆம்புலன்ஸ் ஊழியா்களின் நேர்மைக்கு பாராட்டு
X

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மைக்கு பாராட்டு குவிந்தது. (கோப்பு படம்)

திருவண்ணாமலை அருகே, விபத்தில் சிக்கிய டாஸ்மாக் ஊழியரின் ரூ.90 ஆயிரம் ரொக்கம், ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றை மீட்டு ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை மருத்துவா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

திருவண்ணாமலை புதிய காா்கானா தெருவைச் சோந்தவா் டாஸ்மாக் கடை ஊழியா் ஆறுமுகம் (37). இவா், திருவண்ணாமலையை அடுத்த சிறுநாத்தூா் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றுகிறாா். நேற்று பணி முடித்துவிட்டு பைக்கில் ஆறுமுகம் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாா். தென்அரசம்பட்டு கிராமம் அருகே வந்தபோது, ஆறுமுகம் வந்த பைக் விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆறுமுகம் மயக்கத்தில் இருந்த நேரத்தில் அவரிடமிருந்த ஓட்டுநா் உரிமம் மற்றும் ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மருத்துவ உதவியாளா் ஷேக் முத்தலி, ஓட்டுநா் மணி ஆகியோா் மீட்டு மருத்துவமனையில் ஆறுமுகத்தின் மனைவி சாவித்திரியிடம் ஒப்படைத்தனா்.

உரிய நேரத்தில் விபத்துக்கு உள்ளானவருக்கு முதலுதவி செய்தும், உடைமைகளை பத்திரமாக ஒப்படைத்தமைக்காக 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவரை மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Updated On: 30 Jan 2023 1:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...