/* */

மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டிற்கு புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்து மீன்வளர்ப்பு செய்யும் திட்டத்தில் பட்டியல் பிரிவினர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் 1 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு செலவினம் என திட்ட மொத்த செலவினம் ரூ.7 லட்சத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு 60 சதவீத என அதிகபட்சமாக ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி பட்டியல் (எஸ்.சி./எஸ்.டி.) பிரிவினர் 1 ஹெக்டேர் பரப்பிற்கு மீன் குளம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் அதிகம் பெறபடுமாயின் பயனாளர்கள் முன்னுாிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 6 April 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  3. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  6. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  7. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  8. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  9. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  10. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?