/* */

தீபத் திருவிழா நாளில் அன்னதானம் வழங்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

தீபத் திருவிழா நாளில் அன்னதானம் வழங்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்
X

 திருவண்ணாமலை கலெக்டர்  முருகேஷ் தலைமையில் அலுவலக கூட்ட அரங்கில்  கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. 10 நாள்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ஆம் தேதி மகாதீப பெருவிழா நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் தலைமையில் அலுவலக கூட்ட அரங்கில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆட்சியர் முருகேஷ் பேசியதாவது: மழையினால் சேதமடைந்துள்ள பாதைகளை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை முறையாக செயல்படுத்த வேண்டும்.

மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.கால்நடை துறையின் மூலம் கால்நடை சந்தையில் கலந்து கொள்பவர்கள் இந்த ஆண்டு பதிவு முறையினை கடைபிடிக்க வேண்டும்.

பக்தர்கள் அறியும் வகையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே விளம்பர வாகனத்தினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.மேலும் தீபத் திருவிழா குறித்து மேற்கொள்ளப்படும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றா ஆட்சியர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், மாவட்ட டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் பிரதாப் சிங், செய்யாறு சப் கலெக்டர் அனாமிகா, துணை ஆட்சியர் பயிற்சி ரஷ்மி ராணி ,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அன்னதானம் வழங்க முன் அனுமதி பெற வேண்டும்: அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் 27 பொது இடங்கள் மற்றும் 157 தனியாருக்கு சொந்தமான இடங்கள், மண்டபங்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அளிக்கப்பட்ட பொது மற்றும் தனியார் இடங்களில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மற்றும் திருவண்ணாமலை செங்கம் சாலை பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் (செவ்வாய்கிழமை) முதல் வருகிற 26- ஆம் தேதி (சனிக்கிழமை) வரை அனுமதி பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிப்பதற்கு 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கிகரிக்கப்பட்ட சான்று நகல், தங்கள் சார்ந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் அளிக்க வேண்டும்.

26-ந் தேதிக்கு பின்னர் அன்னதான விண்ணப்பம் பெறப்பட மாட்டாது. அன்னதானம் அளிப்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் அளிக்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது.அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும். போதிய வழிக்காட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு 044-237416, 9047749266, 9865689838. என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Nov 2022 12:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!