சொத்தின் வில்லங்கம் தெரிய வேண்டுமா? பத்திர பதிவு துறையின் புதிய வசதி
![சொத்தின் வில்லங்கம் தெரிய வேண்டுமா? பத்திர பதிவு துறையின் புதிய வசதி சொத்தின் வில்லங்கம் தெரிய வேண்டுமா? பத்திர பதிவு துறையின் புதிய வசதி](https://www.nativenews.in/h-upload/2024/04/24/1895041-patra.webp)
வில்லங்க சான்றிதழ்களின் அவசியம் என்ன தெரியுமா? தமிழக அரசு அறிவித்திருக்கும் புதிய சலுகை என்ன தெரியுமா? இதுபற்றி தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளலாம்.
வீடுகள், நிலம், வீட்டு மனை, போன்ற சொத்துகளை வாங்குபவர்கள், தாங்கள் வாங்கும் சொத்தினுடைய முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வார்கள். இதற்காக பெறப்படுவதே வில்லங்க சான்றிதழாகும். குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இதுவாகும்.
வாங்கப்போகும் அந்த சொத்து இதுவரை யாரிடம் இருந்தது? யாரிடமிருந்து கைமாறி வந்தது? என்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமல்ல, அந்த சொத்தானது, பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் உள்ளடங்கியிருக்கும். இதன்மூலம், அந்த சொத்து தொடர்பான வில்லங்கத்தினை நம்மால் முழுமையாக அறிய முடியும். இந்த வில்லங்க சான்றிதழ்கள் தற்போது தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.
காரணம், அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெற வேண்டுமானால், இந்த வில்லங்க சான்றிதழ்தான் உடனடி தேவையாக இருக்கிறது. இந்த வில்லங்க சான்றினை பெற வேண்டுமானால், பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதிருக்கும். இப்போது, ஆன்லைனிலேயே வில்லங்க சான்றினை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக, புரோக்கர்கள் தேவையில்லை. யாருக்கும் லஞ்சம் கொடுக்கவும் தேவையில்லை. 1950 முதல் 1974 வரையிலான காலத்திற்குரிய வில்லங்க சான்றிதழ்களை வெப்சைட் மூலமாகவே நம்மால் பதிவேற்றம் செய்ய முடியும்.
பதிவுத்துறையின் http://www.tnreginet.net/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று நேரடியாக சென்று மற்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதேபோல, வில்லங்க சான்றை டவுன்லோடு செய்யவும், encumbrance certificate என்ற லிங்கை கிளிக் செய்து பயன்பெறலாம்.
இந்த வசதிகளுடன் சேர்த்து கூடுதல் வசதி ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.. இதுநாள்வரை, வீடு, நிலம் தொடர்பான பத்திரப்பதிவு முடிந்துவிட்டால், சில நாட்கள் கழித்துதான், அதன் உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வில்லங்க விபரங்களை அறிய முடிந்தது. ஆனால், இப்போது இந்த நடைமுறையை தமிழக அரசு மாற்றியிருக்கிறது. அதன்படி, பத்திரப்பதிவு முடிந்த மறுநாளே, வில்லங்க விபரங்கள் அனைத்தையும் ஆன்லைனில், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் பார்த்து கொள்ளலாம்...
பத்திரப்பதிவு செய்தவரின் செல்போன் நம்பருக்கு SMS மெசேஜ் வாயிலாக ஒரு இணையதள இணைப்புக்கான குறியீடு அனுப்பப்படும். அதன்வழியே சென்றால், தங்கள் சொத்து தொடர்பான பத்திரப்பதிவு விபரம் வில்லங்க சான்றிதழில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்ற மொத்த விவரங்களையும் அறிய முடியும். முற்றிலும் இலவசம்: ஆன்லைனில் வில்லங்க சான்றிதழை இலவசமாக பார்க்க வேண்டுமானால், https://tnreginet.gov.in/portal/ என்ற வெப்சைட்டிற்குள் சென்று, E-services> Encumbrance Certificate > View EC என்ற லிங்க்கை தர வேண்டும். இதில், வில்லங்க சான்றிதழை பார்க்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu