/* */

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை: கலெக்டர்

திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

HIGHLIGHTS

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை: கலெக்டர்
X

திருவண்ணாமலை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பபை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பபை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க துணைத் தலைவர் கம்பன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் வரவேற்றார். அப்போது மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது. அந்த வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அரசு பேருந்துகளில் மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரையும் கலெக்டர் ஒட்டி தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் ஸ்டிக்கர்களை கடைகளில் ஒட்ட உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சித்ரா பவுண்மி வரஉள்ளதால் கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேருந்து நிலையத்தின் எதிரே சாலையில் சென்ற பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் விஸ்வநாதன், உதவி பொறியாளர் சுகாஷினி, திருவண்ணாமலை நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், தி.மு.க. மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 April 2022 1:11 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  3. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  4. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  5. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  6. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  8. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  9. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  10. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...