/* */

ஆணி படுக்கையில் சாந்தி ஆசனம் செய்து பெண் மருத்துவர் உலக சாதனை

திருவண்ணாமலையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆணி படுக்கையில் சாந்தி ஆசனம் செய்து பெண் மருத்துவர் உலக சாதனை படைத்துள்ளார்.

HIGHLIGHTS

ஆணி படுக்கையில் சாந்தி ஆசனம் செய்து பெண் மருத்துவர் உலக சாதனை
X

சாந்தி ஆசனத்தில் ஆணி படுக்கையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் மருத்துவர்

திருவண்ணாமலையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆணி படுக்கையில் சாந்தி ஆசனத்தில் பெண் மருத்துவர் முப்பது நிமிடம் உலக சாதனை புரிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள தீபமாலை ஆன்மீகத் தொண்டு இயக்கம் மற்றும் மெடிக்கல் இன்ஸ்டிட்யூட் எலக்ட்ரோபதி மருத்துவமனை வளாகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

அப்போது பெண்கள் பாதுகாப்பு மற்றும் 100 தவீத வாக்குப்பதிவு, வனவிலங்கு பாதுகாப்பு உள்ளிட்டவை வலியுறுத்தி மருத்துவர் யமுனா ஹரி கோவிந்தன் ஆணி படுக்கையின் மீது சாந்தி ஆசனத்தில் 30 நிமிடம் உலக சாதனை புரிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கிருபாநிதி தலைமை தாங்கினார்.

ஆண்டாப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகன், மற்றும் பால் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் ராஜா ஹரி கோவிந்தன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, வன அலுவலர் சரவணன் ஆகியோர் உலக சாதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உலக சாதனை புரிந்த மருத்துவர் யமுனா ஹரி கோவிந்தனை, பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்ற யோகா பயிற்சியாளர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கி நினைவு பரிசுகளை வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை உலக சாதனையாளர்கள் தர்ஷன், மருத்துவர் ராஜா, அனீஸ் குமார் மற்றும் தீபமாலை தொண்டு நிறுவன இயக்க நிர்வாகிகள் மருத்துவர்கள் செய்திருந்தனர்.

Updated On: 15 March 2024 2:46 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  4. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  5. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  6. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  7. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  8. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு