/* */

மக்கள் நண்பர்கள் குழுவினருக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி

Deepam Festival -தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மக்கள் நண்பர்கள் குழுவினருக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மக்கள் நண்பர்கள் குழுவினருக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி
X

மக்கள் நண்பர்கள் குழு உறுப்பினர்களுக்கு சீருடை வழங்கிய நகர காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர்.

Deepam Festival -அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நிகழாண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

நவம்பர் 24 ஆம் தேதி ஸ்ரீ துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது.

விழாவில் ஐந்தாம் நாளான டிசம்பர் ஒன்றாம் தேதி வெள்ளி பெரிய ரிஷப வாகனம், 2 ம் தேதி வெள்ளி ரதம், 3 ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், டிசம்பர் 6 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். 8 ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் , டிசம்பர் 7, 8, 9 , தேதிகளில் தெப்பல் திருவிழா நடைபெறுகிறது.

தீபத் திருவிழாவிற்கு முதல் திருவிழாவிலிருந்து பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இக்காலகட்டங்களில் காவல்துறைக்கு உதவுவதற்காக போக்குவரத்தை சீர் செய்வது, பேருந்து நிலையங்களில் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது , தீபத் திருவிழாவின் பத்து நாட்களிலும் காலை மாலை இரு வேலைகளிலும் சுவாமி வீதி உலாவின் போது போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து மாட வீதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் பக்தர்கள் மாட வீதிகளில் நின்று சுவாமி தரிசனம் செய்வதற்கும் வழிவகை செய்வது ,

திருக்கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் விரைவாக செய்ய வழிவகை செய்வது என மாவட்ட காவல் துறையினருடன் இணைந்து மக்கள் நண்பர்கள் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பா்கள் (ப்ரண்ட்ஸ் ஆப் பீப்பிள்) குழுவின் ஆலோசனைக் கூட்டமும், தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் குழு உறுப்பினா்களுக்கு சீருடை வழங்கும் விழாவும் நடைபெற்றது

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மக்கள் நண்பா்கள் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் பி.ஹூபா்ட் தனசுந்தரம் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் ஆா்.வெங்கடேசன் வரவேற்றாா்.

காவல் ஆய்வாளா் ரா. விஜயபாஸ்கா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மக்கள் நண்பா்கள் குழு உறுப்பினா்களுக்கு திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்குத் தேவையான சீருடைகளை வழங்கினாா்.

கூட்டத்தில், திருவண்ணாமலை நகர காவல் உதவி ஆய்வாளா்கள் இரா.மோகன், மா.தனசேகரன், தலைமைக் காவலா் எஸ்.சிங்காரவேலு, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் ஏ.ஜெய்பிலிப்ஸ் சாமிதம்பி, தேசிய மாணவா் படை அலுவலா் பி.சாந்தகுமாா் , மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு நிர்வாகிகள் , உறுப்பினர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 Nov 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்