/* */

திருவண்ணாமலையில் அம்மா மினி கிளினிக் திறப்பு

திருவண்ணாமலையில் அம்மா மினி கிளினிக் திறப்பு
X

கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காகவே அதிமுக அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடையூர், வேடநத்தம், ராஜந்தாங்கள், கட்ட மடுவு, மன்சுராபாத், ஓதலவாடி, பேரணம்பாக்கம், கண்ணகந்தல் ஆகிய 8 இடங்களில் புதியதாக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மினி கிளினிக்குகளை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு விலையில்லா ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசுகையில்: இந்தியாவிலேயே, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை துறை, கல்வித்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 27 துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படுவதாகவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக 73 கிளினிக் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Feb 2021 4:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?