/* */

நேரம் மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை: திருவள்ளூர் எஸ்.பி.எச்சரிக்கை

நேரம் மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

நேரம் மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை: திருவள்ளூர் எஸ்.பி.எச்சரிக்கை
X

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. கல்யாண்.

திருவள்ளூர் மாவட்டத்தில்நேரம் மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பா. கல்யான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபா கல்யாண் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் 41 பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டதில் அதில் 25 பட்டாசு கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உளள பள்ளிப்பட்டு,திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, தாமரைப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளான மாவட்டம் முழுவதும் 1028 காவலர்கள் பாதுகாப்பு பணியில் மேற்கொள்ளப்படுவார்கள்.

மேலும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் விதமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் அவர்கள் குடியிருப்பு அருகே உள்ள காவல் நிலையத்திலையோ அல்லது 100 எண் மூலமாகவும் தகவல் அளிக்கலாம் என்றும் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

தீ விபத்துகளை விரைந்து தடுக்கும் வகையில் அவசர தேவைக்கு தீயணைப்பு வாகனங்கள் காவல்துறையினர்கள் தயாராக வைக்கப்பட்டு இருப்பதாகவும். நேரம் மீறி சிறுவர்கள் பட்டாசு வெடித்தால் அவர்களுடைய பெற்றோர்களை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு நாளை மறு நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு காலை ஆறு மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு பட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. அதாவது தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்கள் மீது அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் இந்த உத்தரவு தீபாவளி பண்டிகயை கொண்டாடும் உற்சாகத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் பட்டாசு வெடிக்கும் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது நவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண் எச்சரிக்கை விடுத்து இருப்பது தீபாவளி கொண்டாடும் உற்சாகத்தில் இருக்கும் குழந்தைகள் மட்டும் இன்றி பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே பட்டாசு வெடிப்பதற்கு கூடுதலாக காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் என மொத்தமாக இரண்டு மணி நேரம் அனுமதி வழங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Updated On: 22 Oct 2022 6:52 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!