/* */

பெரியபாளையத்தில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெரியபாளையத்தில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

HIGHLIGHTS

பெரியபாளையத்தில்   மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

பெரியபாளையத்தில் மழைநீர் வடிகால் கட்டுவதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

பெரியபாளையத்தில் சாலை இரு புறம் மழை நீர் செல்ல வடிகால் கால்வாய் பணிகள் நடைபெற உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நெடுஞ்சாலைத்துறையினரால் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுயம்புவாக எழுந்தருளியபுகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில், அரசு மேல்நிலைப்பள்ளி, வங்கிகள், திரையரங்கம், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.

மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதியான பெரியபாளையத்தில் வடிகால் கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழி இல்லாததால். பெரியபாளையம்-ஆரணி சாலையில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சி அளிக்கும். மேலும் ஆரணி- பெரியபாளையம் அவ்வழியாக திருவள்ளூர், தாமரைப்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, சென்னை, பூந்தமல்லி, பூச்சி அத்திப்பட்டு, அலமாதி, பகுதிகளுக்கு நாள்தோறும், நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றது.

இதனையடுத்து மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என பலரும், சாலையை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மழைநீர் வடிகால் கால்வாய் இல்லாத காரணத்தினால் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரானது அடிக்கடி மோட்டார்களை வைத்து பைப்புகள் மூலம் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இதற்கு தீர்வு காண நிரந்தரமாக மழை நீர் செல்ல வடிகால் கால்வாயை அமைத்து தர வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களின் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில்.10.59 மீட்டர் தொலைவிற்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு நிதியிலிருந்துரூ.3 கோடியே70லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இந்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த பணிகளுக்காக சாலை இரு புறம் உள்ள ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கடைகள், வீடுகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜே.சிபி.எந்திரம் மூலம் அகற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Updated On: 20 March 2023 7:40 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...