/* */

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்: இணையவழி சொற்பொழிவு

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளையொட்டி இணைய வழியில் சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்:   இணையவழி சொற்பொழிவு
X

இணைய வழியில் நடந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்.

நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாளான இன்று சிறப்பு இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் கலை ஆசிரியை சொர்ணம் வரவேற்புரை ஆற்றினார். நெல்லை மாவட்ட காப்பாட் சியர் சிவ.சத்திய வள்ளி தலைமை உரை ஆற்றினார். சுத்தமல்லி அரசு மேல்நிலை பள்ளியின் வரலாற்று ஆசிரியர் அன்பழகன் முன்னிலை உரை ஆற்றினார். இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் பிரதிமணன் முத்து, ஹரிஹரசுதன், முத்துமகராசு, துவாரகா கிரிஷ் ஆகியோர் கட்டபொம்மன் போல் உடை அணிந்து வந்து கட்டபொம்மன் பற்றி உரை நிகழ்த்தினர்.

மாணவிகள் தங்கமலர், முகுந்தனா, அக்ஷயா, சூடாமணி ஆகியோர் வேலுநாச்சியார் பற்றி உரை நிகழ்த்தினர். பங்கேற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்களும், கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் இணையம் வழியாக அனுப்பப்பட்டன என்கிற தகவலை மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Jan 2022 4:58 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்