/* */

நெல்லையப்பர் கோவில் யானைக்கு நீச்சல் குளம்: பூமி பூஜையுடன் பணி தொடக்கம்

நெல்லையப்பர் கோவிலில் உள்ள காந்திமதி யானை குளிப்பதற்கு, ரூ. 10 லட்சம் மதிப்பில் நீச்சல் குளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையப்பர் கோவில் யானைக்கு நீச்சல் குளம்: பூமி பூஜையுடன் பணி தொடக்கம்
X

நெல்லையப்பர் கோவில் யானை குளிப்பதற்கு,  நீச்சல் குளம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில், அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஒன்று. இந்த கோவிலில் காந்திமதி என்ற பெண் யானை உள்ளது. காந்திமதி யானைக்கு ரூபாய் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், வசந்த மண்டபம் அருகே நீச்சல் குளம் அமைக்கும் பணி இன்று துவங்கியது.

இதற்காக யானைக்கு இன்று காலை பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, அதன் பிறகு பூமி பூஜை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுவரை, காந்திமதி யானை தாமிரபரணி ஆற்றுக்கு அழைத்து செல்லப்பட்டு குளிந்து வந்தது. தற்போது, இங்கேயே நீச்சல்குளம் அமைத்தால் யானையை குளிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று பக்தர்கள் கூறினர்.

Updated On: 27 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்