/* */

நெல்லையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது கோடை மழை

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு இடி மின்னலுடன் கன மழை பெய்தது. வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

நெல்லையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது கோடை மழை
X

நெல்லையில் இன்று கொட்டி தீர்த்தது கோடைமழை.

இலங்கை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்று வழக்கம்போல் மாநகரில் பிற்பகல் வரை வெயில் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், இரவு திடீரென மாநகரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம், தச்சநல்லூர், பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி, கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, உள்ளிட்ட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்தது. குறிப்பாக நெல்லை மாநகர பகுதிகளில் கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ச்சியாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக மாலை நேரங்களில் மழை பெய்து வருவதன் மூலம் பொதுமக்களுக்கு கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 April 2022 2:40 PM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  3. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  6. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  7. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  8. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  9. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  10. ஈரோடு
    ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி