ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி

சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.
ஈரோடு லக்காபுரம் ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி ஈரோடு லக்காபுரம் புதூரில் உள்ள லட்சுமி நாராயணர் கோவில் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் குருவாயூரப்பன் ஜோதிஷ விஞ்ஞான கலாகேந்திரம் டாக்டர் சுயம் பிரகாஷ் வரவேற்றுப் பேசினார்.
பாத தரிசனம் பாவ விமர்சனம் என்ற தலைப்பில் சென்னை மணிகண்டன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். முன்னதாக, இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதை தொடர்ந்து சாந்தி சாங்கல்பம் அபிஷேகம் அர்ச்சனை மஹா தீபாரதனை புஷ்பாஞ்சலி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த சிறப்பு சொற்பொழிவை பயபக்தியுடன் அமர்ந்து கேட்டனர். முடிவில் ஈரோடு லக்காபுரம் கிளை சிருங்கேரி மடம் ருத்ரா முத்ராதிகாரி பத்மநாபன் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை லக்காபுரம் கிளை பௌர்ணமி வழிபாட்டு குழு சங்கர ஜெயந்தி விழா கமிட்டி சிருங்கேரி சங்கரமடம் ஈரோடு கிளை தர்மாதிகாரி சங்கர ராமநாதன் முத்ராதிகாரி பத்மநாப ஐயர் மற்றும் சங்கர ஜெயந்தி விழா கமிட்டியினர் லட்சுமி நாராயணர் கோவில் பௌர்ணமி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu