/* */

நெல்லையில் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் திட்டம்: தொடங்கி வைத்த ஆட்சியர்

பொதுமக்கள் வீடுகளிலேயே மக்கும் குப்பைகளை இயற்கையாக உரமாக்கும் பைப் கம்போஸ்டிங்க் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நெல்லையில் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் திட்டம்:  தொடங்கி வைத்த ஆட்சியர்
X

நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் புதிய திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார். 

நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் புதிய திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார்.

நெல்லை மாநகர் பகுதியில் நாள்தோறும் வீடுகள். வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து 100 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் மற்றும் 70 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் என மொத்தம் 170 மெட்ரிக் டன் குப்பைகள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மொத்தம் 45 நுண் உரம் தயாரிக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொது மக்கள் தங்கள் வீடுகளிலேயே மக்கும் குப்பைகளை இயற்கை முறையில் உரமாக்கும் பைப் கம்போஸ்டிங்க் என்ற புதிய திட்டத்தினை நெல்லை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட வி.எம். சத்திரம், கவிதா நகர் பகுதியில் உள்ள 150 வீடுகளில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். இத்திட்டப்படி, பொதுமக்களின் வீடுகளில் 5 அடி உயரமுள்ள பிவிசி பைப்பில் ஆங்காங்கே துளையிடப்பட்ட இரண்டு பைப் மண்ணில் புதைத்து வைக்கப்படும். பின்னர் பொதுமக்கள் நாள்தோறும் தங்கள் வீடுகளில் சேரும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை இந்த பைப் உள்ளே சேகரித்து வர வேண்டும். பைப்பில் குப்பைகள் நிரம்பியவுடன், தயிரை ஊற்றினால் வளமான இயற்கை உரம் கிடைக்கும். துவக்க நிகழ்ச்சியாக வி.எம்.சத்திரம் கவிதா நகர் பகுதியில் உள்ள வீடுகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு பைப்புகளை வழங்கினர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: நெல்லை மாநகராட்சியில் ஏற்கெனவே 100 டன் மக்கும் குப்பைகளை நுண் உரம் தயாரிக்கும் கூடம் மூலம் கையாண்டு வருகிறோம். தற்போது ஒரு முன்னோடித் திட்டமாக பைப் கம்போஸ்டிங் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டப்படி பொதுமக்கள் மிக மிக குறைந்த செலவில் தங்கள் வீடுகளிலேயே இயற்கை உரங்களை தயாரித்து கொள்ள முடியும். முதல்கட்டமாக 150 வீடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே உள்ள நுண் உரம் தயாரிக்கும் கூடங்களில் உரம் தயாரிக்க மண்புழுக்கள் தேவைப்படும். ஆனால் பைப் கம்போஸ்டிங் முறையில் மிக எளிய முறையில் உரம் தயாரிக்க முடியும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

தொடர்ந்து, நெல்லை சீர்மிகு நகர் திட்டம்( ஸ்மார்ட் சிட்டி) குறித்து மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டபோது, நெல்லை மாநகரில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 11 திட்டங்களை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

Updated On: 25 Aug 2021 9:13 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  4. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  6. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  9. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?