/* */

டிரைலருக்கே இப்படியா? நெல்லையில் தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்

நெல்லை மாவட்டத்தில் நான்கு திரையரங்குகளில் பீஸ்ட் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக திரையிடப்பட்டது.

HIGHLIGHTS

டிரைலருக்கே இப்படியா? நெல்லையில் தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்
X

நெல்லையில் பிரபல திரையரங்கில் பீஸ்ட் பட ட்ரைலரை காண திரண்ட விஜய் ரசிகர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நெல்லையில் பீஸ்ட் படம் டிரைலர் பார்த்த வேகத்தில் திரையரங்கை தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் டிரைலர் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் தீபக்குமார் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே நடிகையாக நடித்துள்ளார். பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு டிரைலர் வெளியிடப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நான்கு திரையரங்குகளில் பீஸ்ட் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக திரையிடப்பட்டது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்கில் சென்று ட்ரெய்லரை கண்டு ரசித்தனர்.

குறிப்பாக நெல்லை சந்திப்பு மதுரை சாலையில் அமைந்துள்ள பிரபல திரையரங்கில் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 1000 பேர் பீஸ்ட் ட்ரைலரை காண திரண்டனர். முன்னதாக அவர்கள் திரையரங்கிற்கு வெளியே ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ட்ரெய்லர் முடிந்த பிறகு திரையரங்கிற்குள் ரசிகர்களிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரையரங்கில் போடப்பட்டிருந்த இருக்கைகள் சேதமானது போன்றும் திரையரங்கின் வெளியே கண்ணாடிகள் உடைந்து கிடப்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இது குறித்து திரையரங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை கூட்டம் அதிகமாக இருந்ததால் தள்ளுமுள்ளுவில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. புகார் கூறும் அளவுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் வெறும் டிரைலருக்கே திரையரங்கை தெறிக்க விடும் அளவுக்கு நடந்து கொண்ட ரசிகர்களின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 3 April 2022 3:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்