/* */

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா: காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் விழா

நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர விழா. காந்திமதி அம்பாளுக்கு சிகர நிகழ்ச்சியான முளைகட்டும் விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா: காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் விழா
X

நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் திருவிழா நடைபெற்றது.

நெல்லை, நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கவில்லை.

நெல்லை மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் திருவிழா இன்று அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த திருவிழாவிற்காக சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, அதன் பின்னர் காந்திமதி அம்பாளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, அம்பாளுக்கு கண்ணாடி காட்டி நலுங்கு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் முளைக்கட்டிய தானியங்களை சிறப்பு பூஜை செய்து அம்பாளுக்கு மடியில் கட்டி பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் கொரோனா நோய் பரவல் தடுப்பு விதிமுறைகள் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டதால் பக்தர்களின்றி திருவிழா நடைபெற்றது.

Updated On: 10 Aug 2021 5:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்