/* */

நெல்லையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

நெல்லையில் கொலை முயற்சியில்  ஈடுபட்ட 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

நெல்லை மாவட்டம், கட்டுடையார்குடியிருப்பு அம்மன் கோவில் நடுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணனின்இசக்கிமுத்து என்ற மொங்கான்(29),.நாங்குநேரி வட்டம் மூன்றடைப்பு வாகைகுளம் பகுதியை சேர்ந்த பாண்டியின் மகன் நல்லதுரை என்ற பாண்டி(22), முத்துபட்டனின் மகன் சங்கிலிபூவத்தான்(20), உதயகுமாரின் மகன் சதீஷ்ராஜா(21), குமாரசாமியின் மகன் முத்துகிருஷ்ணன் (25), வேலாயுதம் என்பவரின் மகன் குருசச்சின்(24), ஆகியோர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது.

அதன்படி, குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் பத்மநாப பிள்ளைக்கு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் 09.08.2021 அன்று குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 10 Aug 2021 4:53 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்