/* */

சமூகவலைதளங்களில் ஆபாசத்தை பரப்பியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

இந்த ஆண்டில் இதுவரை பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் 74 பேர் உள்பட மொத்தம் 100 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர்

HIGHLIGHTS

சமூகவலைதளங்களில் ஆபாசத்தை பரப்பியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
X

பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி மிரட்டல் விடுத்த 'சைபர் கிரைம் குற்றவாளி" குண்டர் தடுப்புச் சட்டத்தில் இன்று கைது செய்ப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் உடையார்குளத்தைச் சேரந்தவர் முத்து மகன் பலவேசம் (43). இவர் கடந்த 28.05.2021 அன்று ஒரு பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பலவேசத்தை கைது செய்தனர்.

மேற்படி, இவ்வழக்கின் எதிரி பலவேசம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டதன் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் பலவேசத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 74 பேர், போக்சோ வழக்குளில் சம்மந்தப்பட்டவர்கள் 13 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர், மணல் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 3 பேர், விபச்சார வழக்கில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளி ஒருவர் என மொத்தம் 100 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 July 2021 2:49 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்