பாஜகவுக்கு சாதகமான தேர்தல்...! கர்நாடகத்தில் மோடி பிரச்சாரம்..!
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளாக சிக்கபல்லாப்பூரில் பேசிய மோடி தெரிவித்துள்ளார்.
சிக்கப்பல்லாபூரில் ஹெச்டி தேவகவுடாவுடன் ஒரே மேடையில் அமர்ந்த மோடி, பாஜக அரசின் சாதனைகளைப் பற்றி பேசியிருந்தார். தொடர்ந்து இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தங்களது கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார் .
ஜேடிஎஸ் தலைவர் தேவகவுடாவும் இந்த மேடையில் அமர்ந்திருந்த நிலையில், பாஜக ஆட்சி பற்றி பல விசயங்களைப் பேசினார். இந்த தொகுதியில் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப் பதிவு நிகழ இருக்கிறது. வரும் ஏப்ரல் 26ம் தேதி அதாவது அடுத்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில், கர்நாடகத்தில் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் முடிவு வரும் ஜூன் 4ம் தேதி தெரியவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடினமாக வேலை செய்து வரும் தனது அரசு, இந்த மக்களுக்காக எல்லா வேலைகளையும் செய்து முடித்துள்ளது. செய்யப்படாத வேலை என எதுவும் பாக்கி இல்லை எனும் தொணியில் பேசியுள்ளார் மோடி.
அகண்ட பாரதம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாகவே இந்த தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளது. இன்று நான் எனது அரசின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டுடன் உங்களின் ஆசி பெற வந்துள்ளேன். உங்களுக்காக இரவும் பகலும் உழைத்து வரும் நான் எந்த வேலையையும் பாக்கி வைக்கவில்லை. என்னுடைய ஒவ்வொரு நொடியையும் இந்த நாட்டுக்காகவும் நாட்டு மக்களாகிய உங்களுக்காகவும்தான் அர்ப்பணித்துள்ளேன்.
முந்தைய அரசு பற்றி பேசும்போது, எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவைச் சேர்ந்த குடும்பங்கள் அவர்களது ஆட்சி காலத்தில் குடிசைகளில் வாழும் வகையிலேயே அவர்களின் பொருளாதார சூழ்நிலை இருந்தது. அவர்களுக்கு மின்சாரம், தண்ணீர் ஆகியவை எட்டாக் கனியாக இருந்தது. அந்த அரசின் மீது நம்பிக்கை பொய்த்து போய் இருந்தனர் மக்கள். இன்று நான் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. அவர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டைக் கடந்து மேலே வந்துள்ளனர் என்று பேசியுள்ளார்.
முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu