/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் மரணமடைந்த காவல் துறையினரின் வாரிசுகள் 3 பேருக்கு அரசு வேலை...

தூத்துக்குடி மாவட்டத்தில் மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கினார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் மரணமடைந்த காவல் துறையினரின் வாரிசுகள் 3 பேருக்கு அரசு வேலை...
X

காவல் துறையினரின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு பணி ஆணையை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கினார்.

தமிழக காவல் துறையில் பணிபுரிவோர், பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேர்ந்தால் அவர்களது வாரிசுதாரர்களுக்கு பல்வேறு உதவிகள் அரசின் தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்த காவல் துறையினரின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுவதும் உண்டு.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணி அலுவலர்கள் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என தமிழக அரசிற்கு மாவட்ட காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.

அதன் மூலம் காவல்துறையில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் (Data Entry Assistant-Recepionist) பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பணி வழங்கப்பட்ட 3 பேருக்கு அரசு பணிக்கான ஆணையை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று வழங்கினார். மேலும், அவர்களுக்கு ஆறுதல் கூறிய காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் 3 பேரின் பணி சிறக்கவும் வாழ்த்தினார். நிகழ்ச்சியின்போது, மாவட்ட காவல்துறை அலுவலக அமைச்சுப்பணி உதவியாளர் கிருஷ்ணம்மாள் உடனிருந்தனர்.

3 பேர் யார்?:

தமிழக காவல்துறையில் பணியில் இருக்கும் போது மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மனைவி சுமதி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மகன் பிரவான், தலைமைக் காவலர் பாலசுப்பிமணியன் மகள் சுருதிலெட்சுமி ஆகிய 3 பேருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பணி ஆணையை வழங்கினார்.

Updated On: 29 Dec 2022 1:31 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்