/* */

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பக்கிள் ஓடை தூர்வாரும் பணி தொடங்கியது.

பருவமழையை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பக்கிள் ஓடை தூர்வாரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எதிர்வரும் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கிள் ஓடை தூர்வாரும் பணி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அறி உத்தரவின்பேரில் விரைவு படுத்தப்பட்டுள்ளது.


குப்பை மலையாக காட்சியளிக்கும் பக்கிள் ஓடையை பருவமழை காலத்திற்கு முன் முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நெல்லை கலெக்டராக இருந்த இங்கிலாந்தை சேர்ந்த பக்கிள்துரை, தூத்துக்குடி நகரில் மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளம் சேதம் ஏற்படுத்துவதை தடுக்க அவற்றை நேரடியாக கடலுக்குள் கொண்டு செல்ல ஒரு திட்டம் வகுத்தார்.

அதன்படி கோரம்பள்ளத்தில் இருந்து தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வரை 9 கிமீ தூரத்திற்கு கால்வாய் வெட்டி அதன் வழியாக தண்ணீரை கடலுக்கு கொண்டு சென்றார். பக்கிள்துரை அமைத்த கால்வாய் என்பதால், இதனை பக்கிள் கால்வாய் என்றே பொதுமக்கள் தற்போது வரையில் அழைத்து வருகின்றனர்.


பக்கிள் கால்வாயும், தற்போது கழிவுநீர் ஓடையாக மாறியுள்ள நிலையில் வெள்ள நீர் வடிகாலாக பயன்படுமென கருதி, கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் பக்கிள் ஓடையை ஆய்வு செய்து அதனை ரூ.35 கோடியில் சீர்படுத்த உத்தரவிட்டார். அதன்பேரில் பக்கிள் ஓடையை ஆழப்படுத்தி கான்கிரீட் தளத்துடன் அதன் இருபுறமும் சுவர் எழுப்பப்பட்டது. திரேஸ்புரத்தில் இருந்து 3ம் மைல் வரையில் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பக்கிள் ஓடை சீரமைக்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு தூத்துக்குடியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் இருந்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் அடித்து செல்வது பக்கிள் ஓடை மூலம் தடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த பக்கிள் ஓடை தூர்வாரப்படாமல், குப்பை மலையாகவும், மரங்கள், செடிகள் வளர்ந்தும், நாணல்கள் நிறைந்தும் ஒரு காட்டு ஓடைபோல மாறிவிட்டது. கடந்த பருவமழைக்கு முன் நந்தகோபாலபுரம் பகுதியில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே ஓடையின் பாதியளவிற்கு தூர்வாரப்பட்டது. ஆனால் அதன்பின்னர் மழை வந்ததால் தூர்வாரும் பணியும் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் தற்போது கழிவுநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே குட்டைகள் போல தேங்கியுள்ளது. மணல்மேடுகள், குப்பை குவியல்கள், சேறு நிறைந்து செடிகள், கொடிகள், மரங்கள் முளைத்து தண்ணீர் சீராக செல்ல முடியாமல் சிறிய ஓடையாக காணப்படுகிறது. நகரின் மத்தியில் செல்லும் இந்த ஓடை, மழை நேரங்களில் வெள்ள நீர் வடிகாலாகவும் இருப்பதால் அதன் முக்கியதுவம் கருதி போர்க்கால அடிப்படையில் இதனை சீரமைத்து, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து. கடந்த மே 23ம் தேதி ரூ. 28 லட்சம் செலவில் தூர்வாரும் பணி கருத்த பாலம் அருகிலிருந்து துவங்கியது. தற்போது இப்பணி திரேஸ்புரம் கடற்கரை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை இப்பணிகள் நிறைவடைந்துள்ளது. எதிர் வரும் பருவ மழையை கருத்தில் கொண்டு இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு ஓடையிலிருந்த குப்பைகள், மரங்கள், அமலைச்செடிகள் போர்கால அடிப்படையில் அகற்றப்பட்டு வருகிறது.

இப்பணிகளை, மாநகராட்சி மாநகராட்சி மண்டல அலுவலர்கள் ராஜசேகர், சேகர் மற்றும் மாநகர சுகாதர துணை ஆய்வாளர் ஸ்டாலின் உள்ளிட்ட வருவாய் அலுவலர் தனசிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

Updated On: 9 Jun 2021 4:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்