/* */

புத்தாண்டு கொண்டாட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை…

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

புத்தாண்டு கொண்டாட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை…
X

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

புத்தாண்டு தின கொண்டாட்ட விதிமுறைகள் குறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை (31.12.2022) இரவு மற்றும் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான ஞாயிற்றுகிழமை அன்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, தூத்துக்குடியில் உள்ள பீச் ரோடு, அங்குள்ள பூங்காக்கள், புதிய துறைமுகம், தெர்மல்நகர் பீச் உட்பட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதி இல்லை.

நாளை 31.12.2022 அன்று இரவு பொதுமக்கள் பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். புத்தாண்டு அன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து 'பைக் ரேஸ்" செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்குகளையும் பறிமுதல் செய்யப்படும். மேலும், அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் 'வீலிங்" செய்வது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் நின்று மதுஅருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்தாண்டு தினத்தன்று வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டின் தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர அவசர உதவி தேவைப்படுவர்கள் 100, தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்கள் மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றை தொடர்பு கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மகிழ்ச்சியான முறையில் புத்தாண்டினை கொண்டாடவும். பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Updated On: 30 Dec 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்