/* */

தூத்துக்குடியில் மது விற்ற 17 பேர் கைது- 2907 பாட்டில்கள், ரூ. 6,700 பறிமுதல்

தூத்துக்குடியில் மதுவிற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.6700, 2907 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் மது விற்ற 17 பேர் கைது- 2907 பாட்டில்கள், ரூ. 6,700 பறிமுதல்
X

கை செய்யப்பட்டவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டதில் தூத்துக்குடியில் தென்பாகம் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் தலைமைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கம், சாமுவேல், செந்தில்குமார், மகாலிங்கம், முத்துப்பாண்டி மற்றும் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தென்பாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட அண்ணாநகரில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த அண்ணாநகரைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் கிருஷ்ணன் என்ற கண்ணன் (23) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 1872 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

அதே போன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் மாதவராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் ரோந்து சென்று வரும்போது சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 5 பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்த 885 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் தூத்துக்குடி வடபாகம், தெர்மல்நகர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி மேற்கு, எட்டயாபுரம், தட்டார்மடம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய காவல் நிலையங்களுக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டதில் 11 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 12 May 2021 4:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  7. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  8. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  9. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  10. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...