/* */

தூத்துக்குடி மாவட்ட க்ரைம் செய்திகள்..

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த க்ரைம் செய்திகள் சிலவற்றை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்ட க்ரைம் செய்திகள்..
X

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் பற்றிய விவரம் வருமாறு:

கிணற்றுக்குள் விவசாயி சடலம்:

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள கீழமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் வெள்ளைப்பசாமி மகன் கருப்பசாமி (40), விவசாயியான இவர், கடந்த 4 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி பசுவந்தனை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில், அதே கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கருப்பசாமி பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து பசுவந்தனை காவல் ஆய்வாளர் சுதேசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிணற்றுக்குள் சடலமாக கிடந்த கருப்பசாமி தவறி விழுந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா| என்ற கோணத்தில் பசுவந்தனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி திரேஸ்புரம் தொம்மையார்கோவில் தெருவை சேர்ந்த அந்தோணிசாமி மகன் நவீன் என்ற தாமஸ் ஜாய் நவீன் (19). இவர், கடந்த 3 ஆம் தேதி திரேஸ்புரத்தில் உள்ள அந்தணியார் தேவாலயம் அருகே இருந்தபோது இவருக்கும், தூத்துக்குடி பூபல்ராயர்புரத்தை சேர்ந்த பவுலீஸ் மகன் கிளிட்டஸ் (27) என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரமடைந்த கிளிட்டஸ் இரும்பு கம்பியால் நவீனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நவீன் அளித்த புகாரி பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா வழக்கு பதிவு செய்து கிளிட்டஸை கைது செய்தார்.

இருசக்கர வாகனம் பறிமுதல்:

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் பேச்சிபழம் (47). இவர், கடந்த 3 ஆம் தேதி கீழ கூட்டுடன்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் பேச்சிபழத்திடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்தபோது, பேச்சிபழம் செல்போனை கொடுக்காததால் அவரை கையால் தாக்கி விட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து பேச்சிபழம் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பேச்சிபழத்தை தாக்கி செல்போனை பறிக்க முயன்றது கீழ கூட்டுடன்காடு ராஜீவ் நகரை சேர்ந்த சரவணன் மகன் பாலமுருகன் என தெரியவந்தது.

இதனையடுத்து புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து எதிரி பாலமுருகனை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து செல்போன் பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 6 Nov 2022 10:47 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  8. ஆன்மீகம்
    கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா
  9. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  10. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...