/* */

திருவாரூர் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி

திருவாரூர் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி
X

திருவாரூர் அருகே விளமல் கிராமத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கலெக்டர் தலைமையில் கடன் வழங்கப்பட்டது.

திருவாரூர் அருகே விளமல் தனியார் அரங்கில் இன்று தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக மகளிர் சுய உதவிக் குழு சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை ஆட்சியர் காயத்ரி மற்றும் திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் கைவினை பொருட்கள், உணவு பொருட்கள் ஆகிய உற்பத்தி செய்த பொருட்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1029 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 30கோடியே 95லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை ஆட்சியர் காயத்ரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகிய இருவரும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, கொரடாச்சேரி ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 14 Dec 2021 11:46 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  4. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  6. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  9. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?