/* */

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நெற் பயிர்கள் கருகும் அபாயம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கடைமடை பகுதியில் நெற் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டம்   கோட்டூர் அருகே நெற் பயிர்கள் கருகும் அபாயம்
X
கருகிய நிலையில் நாற்றங்கால் நெற்பயிர்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் வேதபுரம் பகுதியில் கோரையாற்றில் இருந்து சாளுவனாறு பிரிகின்றது. இந்த சாளுவனாற்று பாசனத்தை நம்பி மன்னார்குடி அருகே வேதபுரம், வெங்கத்தான்குடி, குறிச்சி மூளை, நெய்குன்னம், களப்பால், சோலைக்குளம், பட்டமுடையான் களப்பால், சீலத்தநல்லூர், மருதவனம், நடுவக்களப்பால், நாராயணபுரம் களப்பால், எழிலூர் பாண்டி, குன்னலூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன.

சுமார் ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வைத்துள்ள சிறு,குறு விவசாயிகளை அதிக அளவில் உள்ளடக்கிய விவசாயிகள் ஏராளமானோர் இந்த சாளுவனாற்றை நம்பி தான் பாசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை சாளுவனாற்றின் பல கிராமங்களுக்கு தண்ணீர் வரவில்லை.

இருப்பினும் மேட்டூர் அணை 12-ம் தேதி திறக்கப்படுவது உறுதியான உடனேயே ஜூன் முதல் வாரத்தில் தங்களது வயல்களில் நேரடி தெளிப்பு செய்தனர். அதன் பிறகு ஓரிரு நாட்களில் பெய்த மழை காரணமாக தெளித்த நெற்பயிர்கள் முளைத்துவிட்டன. தொடர்ந்து சாளுவனாற்று நீரை எதிர்பார்த்து இருந்த நிலையில் மேட்டூர் அணை திறந்து 13 நாட்கள் ஆகிவிட்ட பின்னரும் ஆற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் முளைத்த குறுவைப் பயிர்கள் கருகும் அபாயத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகள் பலரும் அருகில் உள்ள குளங்களில் இருந்து மோட்டார் மூலம் குழாய்கள் போட்டு தண்ணீர் இரைத்து வருகின்றனர்.

எனவே தஞ்சையிலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வருகின்ற வெண்ணாற்றுக்கு கூடுதல் தண்ணீரை கேட்டு பெற்று, கோட்டூர் ஒன்றியம் கோரை ஆற்றில் கூடுதல் தண்ணீரை வழங்கி, சாளுவனாற்றில் பாசனத்துக்கு தண்ணீர் வரும்படி செய்திட வேண்டும். மேலும் சாளுவனாறு பாசனத்துக்கு மட்டுமின்றி வடிகாலாகவும் பல கிராமங்களுக்கு உள்ளதால் புதர் மண்டி கிடக்கின்ற பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 26 Jun 2023 4:28 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  7. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  9. ஆன்மீகம்
    கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா
  10. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...