/* */

மகளிரிடம் வசூல் தனியார் நிதி நிறுவனதுக்கு பூட்டு

திருவாரூரில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி பொதுமுடக்க காலத்தில் மகளிர் குழுக்களிடம் கட்டாய கடன் வசூல் செய்து செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவன அலுவலகத்தை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டினர்.

HIGHLIGHTS

மகளிரிடம் வசூல்  தனியார் நிதி நிறுவனதுக்கு பூட்டு
X

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களிடம் ஊரடங்கு காலத்தில் கட்டாய கடன் தொகைவசூல் செய்யக்கூடாது.

தனியார் நிதி நிறுவன அலுவலகங்கள் மூடப்படவேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனியார் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உத்தரவிட்டிருந்தார்.

திருவாரூர் தெற்கு வீதியில் செயல்பட்டுவரும் தனியார் நிதி நிறுவனத்தில் அலுவலகம் திறக்கப்பட்டு செயல் பட்டு வந்தது.,அதன் ஊழியர்கள் ஆட்சியரின் உத்தரவை மீறி்மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களிடம் கட்டாய கடன் தொகை வசூலில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் திருவாரூர் வட்டாட்சியருக்கு தெரியவந்தது.இதையடுத்து வட்டாட்சியர் நக்கீரன் உத்தரவுபடி திருவாரூர் வருவாய் ஆய்வாளர் பக்கிரிசாமி,மற்றும் துணைவட்டார வளர்ச்சி அதிகாரி புவனேஷ்வரி ஆகியோர் காவல்துறையினரை துணையுடன் தெற்கு வீதியில் செயல்பட்டுவந்து தனியார் நிதி நிறுவன அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்றனர.

அப்போது 30 க்கும் மேற்பட்ட. ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரிந்துவருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட நிதி நிறுவனத்தை உடனடியாக மூட உத்தரவிட்டனர். ஊழியர்களின் எதிர்ப்புக்கிடையே வருவாய்த்துறையினர் அலுவலகத்தை மூடினர்.

Updated On: 19 May 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்