/* */

முதியோர் உதவித்தொகை பெற பல மாதங்களாக காத்திருக்கும் மக்கள்

புரோக்கர்களின் பிடியில் தாலுகா அலுவலகங்கள்: கலெக்டர் முரளிதரன் கவனிப்பாரா?

HIGHLIGHTS

முதியோர் உதவித்தொகை பெற பல மாதங்களாக காத்திருக்கும் மக்கள்
X

முதியோர், ஆதரவற்றோர், விதவை உதவித்தொகை பெற காத்திருக்கும் முதியோர்களின் கோரிக்கையை தேனி மாவட்டத்தில் ஆட்சியர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்

தேனி மாவட்டத்தில் முதியோர், ஆதரவற்றோர், விதவை உதவித்தொகைகள் வழங்குவது சில ஆண்டுகளாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உதவித்தொகை பெறுபவர்களில் யாராவது இறந்தால் மட்டுமே விண்ணப்பித்து காத்திருப்பவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதாவது, உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடாமல் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது. ஆனால், எப்படியாவது உதவித்தொகை பெற நினைப்பவர்கள் இடைத்தரகர்களை அணுகி 'கவனித்த" வுடன், குறிப்பிட்ட மாதமே உதவித்தொகை கிடைக்கக்கூடிய அதிசயம் நடைபெறுகிறது.

இதனால், உதவித்தொகை பெறுவது இடைத்தரகர்கள் இல்லாமல் சாத்தியமில்லை என்ற எண்ணத்தை ஏழை எளிய முதியோர்களிடம் உருவாக்கி விட்டனர். உண்மையில் தகுதியுள்ள ஏழை பயனாளிகள் பலர், உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இந்த பிரச்னையில் நேரடியாக தலையிட்டு, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை அடியோடு அகற்றினால் மட்டுமே தகுதி உள்ள பயனாளிகளுக்கு உண்மையான பலன் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் இடைத்தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளதால், முதியோர், விதவை, ஆதரவற்றோர் உதவித்தொகை பெற சுமார் 10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டியுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி.

Updated On: 27 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்