/* */

ஆண்டிபட்டி யூனியன் கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்

ஒன்றிய கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தலைவர் பாரபட்சம் காட்டுவதாக கூறி தி.மு.க., கவுன்சிலர்கள் கவுன்சில் கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினர்.

HIGHLIGHTS

ஆண்டிபட்டி யூனியன் கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தலைவர் பாரபட்சம் காட்டுவதாக புகார் கூறி தி.மு.க கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது .

ஆண்டிபட்டி ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் லோகிராஜன் (அ.தி.மு.க) தலைமையில் நடந்தது. ஒன்றிய கவுன்சிலில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பதினோரு பேர், அ.ம.மு.க.வில் ஒருவர், காங்கிரஸ் ஒருவர், தி.மு.க.வில் ஐந்து உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்நிலையில், இன்று கூடிய கவுன்சில் கூட்டத்தில் தலைவர் லோகிராஜன், துணைத்தலைவர் வரதன், பி.டி.ஓ-க்கள் திருப்பதி, போஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தலைவர் பாரபட்சம் காட்டுவதாக புகார் கூறி, தி.மு.க கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினர். அதிகாரிகள் ஒரு மணி நேரம் சமரச பேச்சு நடத்திய பின்னர், தர்ணா முடிவுக்கு வந்தது. கவுன்சில் கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Updated On: 23 July 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு