/* */

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
X

வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற சான்றிதழ் வழங்குதல் குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டம் ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்கள் கொடுக்கும் மனுவினை உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மாணவர்கள் உயர்கல்விக்கு சேர்வதால் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அதுபோல விவசாயிகளுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியர் ஆலோசனை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராஜராஜேஸ்வரி மற்றும் அரசு ஊழியர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கலசப்பாக்கம் பகுதியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மீண்டும் கணக்கெடுப்பு பணி தீவிரம்

கலசப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளை மீண்டும் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்

கடந்த ஆண்டில் மொத்தம் 3346 வீடுகள் பட்டியலில் இருந்தது. பிரதம மந்திரி வீடு திட்டத்தில் சுமார் 1382 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 696 பயனாளர்களுக்கு பெயர் பதிவிடப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் என்றால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் அவர்களுக்கு கட்டாயம் வீடு வழங்க வேண்டும்.

குடிசை வீடு ,ஓட்டு வீடு, சீட்டு வீடு ,தட்டை வீடு என்றாலும் தாராளமாக பெயர் பதிவு செய்து அவர்களுக்கு வீடு வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது . அதன் அடிப்படையில் தற்போது கலசப்பாக்கம் ஊராட்சியில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தில் விடுபட்டுள்ள பயனாளிகளின் கணக்கெடுக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

Updated On: 18 May 2024 2:40 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு