/* */

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது

மணல் கடத்தலில் ஈடுபட்ட  டிராக்டர்  பறிமுதல் செய்யப்பட்டது
X

தஞ்சை அருகே வேட்டமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த டிப்பருடன் இணைக்கப்பட்ட டிராக்டரை தஞ்சாவூர் தாலுகா போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி மற்றும் போலீசார் வேட்டமங்கலம் பகுதியில் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பருடன் இணைக்கப்பட்ட டிராக்டரை மறித்தனர். போலீசாரை கண்டவுடன் டிராக்டரை ஓட்டி வந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீஸார் சோதனை செய்து பார்த்தபோது அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. தஞ்சாவூர் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டிராக்டர் உரிமையாளர் வேட்டமங்கலத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (40) என்பவரை தேடி வருகின்றனர்.

Updated On: 12 May 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’