/* */

பொதுத்தேர்வை மாணவர்கள் திருப்தியாக எழுதுங்கள்:அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

மார்ச் மாதத்திற்குள் பாட திட்டங்களை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்

HIGHLIGHTS

பொதுத்தேர்வை  மாணவர்கள் திருப்தியாக எழுதுங்கள்:அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
X

தஞ்சாவூர் அருகே தோழகிரிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சீர்மிகு அங்கன்வாடி மையம் மற்றும் நூலகத்தினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

மாணவர்கள் பொதுத்தேர்வை திருப்தியாக எழுதவேண்டும் என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

தஞ்சாவூர் அருகே தோழகிரிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சீர்மிகு அங்கன்வாடி மையம் மற்றும் நூலகத்தினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் 27 அறிவிப்புகள் கொடுத்திருந்தோம், அதில் 15 அறிவிப்புகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. மீதமுள்ளவை அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூட்ட தொடரில் புதிய அறிவிப்புகள் வரும் என்றும், 35% முதல் 50% சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் பாட திட்டங்களை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும். பின்னர் திட்டமிட்டபடி பொது தேர்வு நடைபெறும். மாணவர்கள் பயப்படாமல் உங்கள் மனநிலைக்கு ஏற்றவாறு திருப்தியாக தேர்வினை எழுத வேண்டும். உங்களுக்கு என்று ஒரு நாற்காலி காத்திருக்கிறது. பெற்றோர்களுக்காக படிக்காமல், உங்களுக்கு என்ன வருகிறதோ, உங்கள் என்று என்ன தனித்திறமையை இருக்கிறதோ அதை நோக்கி உங்கள் பயணம் அமைய வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியாக படியுங்கள், உங்கள் திருப்திக்காக தேர்வினை எழுதுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

Updated On: 7 March 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  3. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  4. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  5. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  7. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  9. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  10. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!