ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது

ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
X
Erode news- கைது செய்யப்பட்ட பகதூர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டை படத்தில் காணலாம்.
Erode news- ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.

Erode News, Erode Today News, Erode Live News - ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாதவ கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த கடையில் 5 கிலோ கஞ்சா சாக்லேட் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பதுக்கி வைத்திருந்த உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பகதூர் (வயது 64) என்பவரை கைதுசெய்து, கடையில் இருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!