/* */

நெல் ஈரப்பதம்: மத்திய உணவுக் கழகத்தின் தரக் கட்டுப்பாடு துணை இயக்குனர் ஆய்வு

நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

நெல் ஈரப்பதம்: மத்திய உணவுக் கழகத்தின்  தரக் கட்டுப்பாடு துணை இயக்குனர் ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மத்திய குழுவினர் நெல் ஈரப்பதம் குறித்து  மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மையம்,(ஹைதராபாத்) துணை இயக்குனர் எம்.இசட்.கான் குழுவினர் ஆய்வு செய்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மத்திய குழுவினர் நெல் ஈரப்பதம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மையம்,(ஹைதராபாத்) துணை இயக்குனர் எம்.இசட்.கான் ,இந்தியஉணவுக் கழகம்,தரக் கட்டுப்பாடு பிரிவு தொழில் நுட்ப அலுவலர் சி.யூனிஸ் ஆகியோர் இன்று(15.10.2022) பல்வேறு நேரடி கொள்முதல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மத்திய உணவுகழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வுதரக் கட்டுப்பாடு மையம், (ஹைதராபாத்) துணை இயக்குனர் எம்.இசட்.கான் தெரிவித்ததாவது:

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக நடப்பாண்டு முன்கூட்டியே மே24ல், மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டது. இதைப்பயன்படுத்தி, 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடந்துள்ளது. நெல் கொள்முதல் மையங்கள் செப்.- 1 முதல் செயல்படும் என அரசு அறிவித்தது. இவற்றில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால்,நெல் மூட்டைகளை விற்க முடியாத நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து,தமிழக அரசின்கொள்முதல் முகமையான நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீதம் ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி மத்திய உணவுத் துறை செயலருக்கு தமிழக அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், வடகிழக்கு பருவமழையின் காரணமாக காற்றில் ஈரம் அதிகரித்துள்ளது.

எனவே, விவசாயிகளின் துன்பத்தை குறைக்கும் வகையில், தமிழக அரசின்கொள்முதல் முகமையான நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீதம் ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். விளையாத, சுருங்கிய நெல்லுக்கு 3-க்கு பதிலாக 5 சதவீதமும், சேதமடைந்தது, நிறம் இல்லாதது, முளைத்தது, அந்துப்பூச்சி தாக்கிய நெல்லுக்கு 5-க்கு பதிலாக 7 சதவீதமும் என நிபந்தனையில் தளர்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், வண்ணாரப்பேட்டை ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தரக்குடி, சடையார்கோவில், பொன்னாப்பூர் ஆகிய நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரிதது இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டு அறிந்தோம். இன்னும் ஓரிரு நாட்களில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து அதன் முடிவில் விவசாயிகளிடம் பெறப்பட்ட கருத்துகள் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வுதரக் கட்டுப்பாடு மையம், (ஹைதராபாத்) துணை இயக்குனர் எம்.இசட்.கான் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது உதவிபொது மேலாளர் குணால் குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலைய மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, முதுநிலைமேலாளர் (பொ) இ.செந்தில்,முதுநிலைமேலாளர் (பொ) முனைவர் வி.அன்புராஜ் மற்றும் கொள்முதல் நிலைய அதிகாரி உள்ளிட்டோர் இருந்தனர்.

Updated On: 15 Oct 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  2. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  3. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  4. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  5. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  6. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  7. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  8. காஞ்சிபுரம்
    இருசக்கர வாகனத் திருட்டு: ஆட்டோ டிரைவர் கைது
  9. செங்கம்
    செங்கம் அருகே கட்டிடத் தொழிலாளி உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
  10. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...