/* */

வேளாண் சார்ந்த பொருள்களுக்கு, வெளிநாடுகளில் தேவை அதிகம்:வர்த்தக இயக்கக உதவி இயக்குநர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் பொருள்களுக்குப் பன்னாட்டு அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது

HIGHLIGHTS

வேளாண் சார்ந்த பொருள்களுக்கு, வெளிநாடுகளில் தேவை அதிகம்:வர்த்தக இயக்கக உதவி இயக்குநர்
X

தஞ்சாவூர் மாவட்டத்தைப் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மண்டலமாக மாற்றும் வகையில் மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம் தஞ்சையில் நடைபெற்றது

வேளாண் சார்ந்த பொருள்களுக்கு, வெளிநாடுகளில் அதிக தேவை இருப்பதாக மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்கக உதவி இயக்குநர் பாக்கியவேலு தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைப் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மண்டலமாக மாற்றும் வகையில் மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம் தஞ்சையில் நடைபெற்றது.

இதில் மத்திய அரசின் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணை இயக்குநர் செல்வநாயகி, மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்கக உதவி இயக்குநர் பாக்கிய வேலு மற்றும் கைவினை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பாக்கியவேலு மேலும் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் பொருள்களுக்குப் பன்னாட்டு அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக அரிசி ஏற்றுமதி சிறப்பாக உள்ளது. இந்திய வம்சாவளியினர் உள்ள நாடுகள் அனைத்திலும் அரிசி தேவைப்படுகிறது. பாரம்பரிய அரிசி வகைகளையும், சிறுதானியங்களையும் விரும்புகின்றனர்.

இதேபோல, புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருள்களுக்கும் உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இப்பொருள்களை வணிக ரீதியாக மாற்றினால்தான் ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். இதைச் சரியாகப் புரிந்து கொண்டால் ஏற்றுமதியை வெற்றிகரமாகச் செய்யலாம்.ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றுமதிக்கான விதிமுறைகள் மாறுபடுகின்றன. சுற்றுச்சூழல், சுகாதாரம் அடிப்படையில் உள்ள இந்த வேறுபாடுகளை ஏற்றுமதியாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வேளாண் பொருள்கள் ஏற்றுமதியைப் பொருத்தவரை ஒவ்வொரு பொருளுக்கும் தரக்குறியீடு உள்ளது. ஜப்பான் நாட்டில் பூச்சி மருந்து அதிகமாக உள்ள விளைபொருள்களை ஏற்றுக் கொள்வதில்லை. இதுபோல, பல்வேறு நாடுகளில் பல விதமான விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு ஏற்றுமதி தொழிலில் ஈடுபட வேண்டும்.

நம் நாட்டுக் கைவினைப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 வகையான புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருள்கள் உள்ளன. இவற்றைப் பன்னாட்டு அளவில் சந்தைப்படுத்து வதற்கான தேவை அதிகமாகியுள்ளது. இந்த வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Updated On: 28 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!