/* */

அதிகாரிகள் அலட்சியம் - ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்.

வளம்பக்குடி கிராமத்தில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் அதிகாரிகள் அலட்சியத்தால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்

HIGHLIGHTS

அதிகாரிகள் அலட்சியம் - ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்.
X

மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகள்

தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி கிராமத்தில் அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. கடந்த ஆண்டு 2021-22 குறுவை அறுவடை பருவத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் இந்த சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டன.

பின்னர் இங்கு இருந்து லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் தனியார் மற்றும் அரசு ஆலைகளுக்கு அரவைக்கு கொண்டு செல்லப்படும். மேலும் ரயில் வேகன் மூலம் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் ஒரு ஆண்டு கடந்தும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதால் நெல் மூட்டைகளை எலி கடித்து புழுக்கள் வைத்து சேதம் அடைந்து உள்ளன.

மேலும் தொடர்ந்து வெயில், மழை, பனி என கிடப்பதால் நெல்மணிகள் அழுகி போய்வுள்ளன. பல கோடி ரூபாய் பணம் கொடுத்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல் வீணாகி போவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Updated On: 9 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!