/* */

மது போதையில் ஐந்தருவி பாலத்தில் பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்

குற்றாலம், ஐந்தருவி பகுதியில் மது போதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மரணம்.

HIGHLIGHTS

மது போதையில் ஐந்தருவி பாலத்தில் பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்
X

ஐந்தருவி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த வாலிபர்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து உள்ளது. தற்போது தொடர் விடுமுறை உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு குளிக்க வருகை தருகின்றனர். இந்நிலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுதிகளிலும், சாலை ஓரங்களிலும் தங்குகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வடதிட்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார் நண்பர்களுடன் குளிப்பதற்காக ஐந்தருவி பகுதிக்கு சென்றுள்ளார் அங்கு இரவு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மதுபோதையில் இருந்த குமார் அங்குள்ள பாலத்தின் மீது ஏறி படுத்துள்ளார். அப்போது தடுமாறி பாலத்தின் கீழே விழுந்து, தலையில் அடிபட்டு அதே இடத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.

குமாரை காணாததால் நண்பர்கள் தேடியுள்ளனர். அதிகாலை பாலத்தின் அடியில் இறந்த நிலையில் குமார் கிடப்பதை கண்டு குற்றாலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து செங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் குமாரின் சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கூலி வேலை செய்து வரும் குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

Updated On: 15 April 2022 12:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!