/* */

தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளியன்றும், மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி மாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை வருண கலச பூஜை நடைபெற்றது.

இதற்காக அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, நெல் நாற்று வைத்து வருண கலச பூஜை நடைபெற்றது.

மேலும் மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தென்காசி சிவ பூதகண நாதர் வாத்திய குழூவினரின் பஞ்ச வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனர்.

Updated On: 12 March 2022 1:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க