/* */

தென்காசியில் புதிதாக இருசக்கர ரோந்து வாகனங்களை துவங்கி வைத்த எஸ்.பி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக பீட்டா பேட்ரோல் என்ற இருசக்கர ரோந்து வாகனங்களை போலீஸ் எஸ்பி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

தென்காசியில் புதிதாக  இருசக்கர ரோந்து வாகனங்களை துவங்கி வைத்த எஸ்.பி
X

தென்காசி மாவட்டத்தில் புதிதாக பீட்டா பேட்ரோல் என்ற இருசக்கர ரோந்து வாகனங்களை துவங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கும் விதமாகவும்,குற்றச் செயல்கள் நடந்தால் விரைவாக சம்பவ இடத்திற்கு செல்லும் வண்ணம் ரோந்து இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 29 காவல் நிலையங்களுக்கும் ஒரு இருசக்கர ரோந்து வாகனம் (தென்காசி,குற்றாலம் 2 வாகனங்கள்) என்று மொத்தம் 31 இருசக்கர ரோந்து வாகனங்கள் (BETA PATROL) வழங்கப்பட்டு அதன் இயக்கத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் துவங்கி வைத்தார்.

மேலும் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு,தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துண்டுப்பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், காவல் ஆய்வாளர் பாலமுருகன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மார்டின், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Aug 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்