/* */

குற்றாலத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

குற்றாலத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

குற்றாலத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
X

குற்றாலம் அருவிக்கரை பகுதியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் சட்டமன்றத்தில் குற்றாலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு குற்றாலத்தை மேம்படுத்த சுமார் 11 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதனைத் தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

பெண்கள் உடை மாற்றும் அறை, அருவி முன்பு இருக்கும் தடாகம், தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வதற்கு ஏதுவாக தனியாக ஏற்கனவே இருந்த மண்டபங்களை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடு செய்வது ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

குற்றாலத்தில் இயங்கி வந்த தபால் அலுவலகம் பாழடைந்து உள்ளது. அதனை தற்போது இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது தென்காசி வட்டாரத் தலைவர் பெருமாள், மாவட்ட செயலாளர்கள் கோவிந்தராஜுலு, கண்ணன், நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், நகரப் பொருளாளர் ஈஸ்வரன், கிராம கமிட்டி தலைவர் ஆறுமுகம், குற்றாலம் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வீரபாண்டி நன்னகரம் திரவியம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 May 2023 3:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க