/* */

குற்றாலத்தில் விவசாய சங்கங்கள் சாலை மறியல் போராட்டம்

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் குற்றாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குற்றாலத்தில் விவசாய சங்கங்கள் சாலை மறியல் போராட்டம்
X

குற்றாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கங்கள்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்களானது கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த கோரி பல்வேறு அமைப்புகள் நாள்தோறும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து வலியுறுத்த கோரி, தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் குற்றாலம் பகுதியில் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்திக்கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருந்து வரும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தென்காசி மாவட்டத்தின் இயற்கை வளங்களை சுரண்டி கேரளாவிற்கு கொண்டு செல்லும் தமிழக அரசை கண்டித்தும் தற்போது பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் தற்போது சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், குற்றாலம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளதால் குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Updated On: 15 May 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்