/* */

நாகர்கோவில் -கோவை ரெயில் புறப்படும் நேரம் நெல்லையில் மாற்றி அமைப்பு

நாகர்கோவில் -கோவை ரெயில் புறப்படும் நேரம் நெல்லையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நாகர்கோவில் -கோவை ரெயில் புறப்படும் நேரம் நெல்லையில் மாற்றி அமைப்பு
X

ரயில் (கோப்பு படம்).

திருச்செந்தூர்- செங்கோட்டை மார்க்க பயணிகள் நாகர்கோவில் - கோவை ரயிலை நெல்லையில் பிடிக்க தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை, குமரி மற்றும் தென்மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் நெல்லையில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்கிறது. இதனால் திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டை பாசஞ்சர் ரயில்களில் ஏறி நெல்லை வரும் பயணிகள் இந்த ரயிலை பிடிக்க முடியாமல் திண்டாடினர். செங்கோட்டை - நெல்லை பயணிகள் ரயில் காலை 6.40 மணிக்கு, செங்கோட்டையில் புறப்பட்டு நெல்லைக்கு 8.50 மணிக்கு வந்து சேருகிறது.

திருச்செந்தூர் - நெல்லை ரயில் காலை 7.10 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு நெல்லைக்கு 9 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரயில்களில் வரும் பயணிகள் நெல்லையில் 8.50 மணிக்கு புறப்படும் கோவை ரயிலை மயிரிழையில் தவறவிடுகின்றனர். எனவே கோவை ரயிலை பிடிக்கும் வகையில் திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டை பாசஞ்சர் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதோடு, கோவை ரயிலையும் தாமதமாக இயக்கிட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர். கோட்ட ரயில்வே ஆலோசனை குழு கூட்டத்தில் ஆலோசனைகுழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நெல்லை - திருச்செந்தூர், நெல்லை - செங்கோட்டை வழித்தடங்களில் ஏற்கனவே மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ரயில்களை வேகமாக இயக்கிட கேட்டு கொண்டனர். அதன்படி திருச்செந்தூரில் காலை 7.10 மணிக்கு புறப்படும் ரயில், நெல்லைக்கு காலை 9 மணிக்கு வருவதற்கு பதிலாக 10 நிமிடங்கள் முன்னதாக வந்து சேரும்படி கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

செங்கோட்டை பாசஞ்சர் ரயிலும் காலை 8.45 மணிக்கே தற்போது நெல்லை வந்து சேருகிறது. நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் நெல்லையில் 8.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 9.05 மணிக்கு புறப்படும் வகையில், அதன் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர், செங்கோட்டை மார்க்கத்தில் இருந்து ரயில் பயணிகள், நெல்லை ரயில் நிலையத்தில் கோவை ரயிலை பிடித்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 27 Jan 2023 12:42 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...