/* */

தென்காசி மாவட்டத்தில் மருத்துவ கழிவு கொட்டிய ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு மாவட்ட ஆட்சியர் தகவல்

கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் தொடர்பாக இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் மருத்துவ கழிவு கொட்டிய ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு மாவட்ட ஆட்சியர் தகவல்
X

பட விளக்கம்: தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது எடுத்த படம்.

தென்காசி மாவட்டத்தில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் தொடர்பாக இதுவரை 9 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் தமிழ்நாடு கதர் கிராம தொழிலாளர் வாரியம் சார்பில் காதி கிராப்ட் அங்காடி துவக்க விழா நடைபெற்றது.

காதிகிராப் அங்காடி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,

தென்காசி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லை பகுதியான புளியரையில் 3 சோதனை சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சோதனை சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் தொடர்பாக இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் செயற்பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாலும் தொடர்ந்து வழக்குப்பதிவுகள் நடைபெறுவதாலும் தற்போது கழிவுகள் கொண்டு வரப்படுவதில்லை.

அதே போன்று தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம், கீழப்பாவூர் பகுதிகளில் காய்ச்சல் பரவல் அதிகமாக காணப்பட்டு வந்தது. இதன் விளைவாக அனைத்து வட்டாரங்களிலும் சுகாதாரத் துறை சார்பில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. அந்த அடிப்படையில் தற்போது மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 23 Feb 2023 2:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க