/* */

பள்ளி மாணவர்களுக்கு அரசு ஏற்பாடு செய்த கல்லூரி விசிட்! கலக்கல் திட்டம்!

களப்பயணத்தை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மேற்கொண்டனர்

HIGHLIGHTS

பள்ளி மாணவர்களுக்கு அரசு ஏற்பாடு செய்த கல்லூரி விசிட்! கலக்கல் திட்டம்!
X

 பட விளக்கம் : பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு களப்பயணம் மேற்கொண்ட போது எடுத்த படம்

தென்காசி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தென்காசி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளை உயர்கல்வி படிப்பதற்கு ஆர்வமூட்டும் வகையில் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டது.

ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 53 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 530 மாணவ மாணவிகள் அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரி சுரண்டை, அரசு கலைக்கல்லூரி சங்கரன்கோவில், அரசு கலைக்கல்லூரி கடையநல்லூர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆலங்குளம், ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி குற்றாலம் ஆகிய ஆறு கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இக்களப்பயணத்தை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மேற்கொண்டனர்.

முதன்மை கல்வி அலுவலர் கபீர் கல்லூரி களப் பயணத்தை தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் முறையாக இது போன்ற முயற்சி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே உயர் கல்விக்கான ஆர்வத்தையும், பள்ளி படிப்பு முடித்த பின்னர் கல்லூரிகளில் தங்களுக்கான துறையை தேர்ந்தெடுப்பதில் உள்ள குழப்பங்களிலிருந்து தெளிவும், உயர் கல்வியில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.

கல்லூரி வளாகம், கல்லூரிகளில் செயல்படும் பல்வேறு துறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், கலையரங்கம், நூலகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை நேரடியாக சென்று பார்வையிடுவதால் உயர் கல்வி குறித்து ஆர்வம் அதிகரித்துள்ள தாக மாணவர்கள் மகிழ்வுடன் தெரிவித்தனர்.

Updated On: 1 March 2023 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க